ராஜித கூறுவது பொய்;மறுக்கிறார் மகிந்த - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

ராஜித கூறுவது பொய்;மறுக்கிறார் மகிந்த

Image result for மகிந்த ராஜபக்சரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து விலகத் தேவையில்லை என்று தாம் கூறியதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருப்பது முழுப் பொய் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.
நேற்று நடந்த அமைச்சரவை முடிவை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டியதில்லை என்று, அவருடனான தொலைபேசி உரையாடலின் போது, மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார் என, ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து, நேற்று அபேராமய விகாரையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ச,
“இது ஒரு திட்டமிட்ட பொய். ராஜிதவின் மற்றொரு பொய் இது. ஒரு மூத்த அமைச்சர் என்ற வகையில் அவர் இதுபோன்ற பொய்களைக் கூறுவதையும், பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவதையும் நிறுத்த வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

About Unknown