அண்ணன் ஆதரவு, தம்பி எதிர்ப்பு - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

அண்ணன் ஆதரவு, தம்பி எதிர்ப்பு

Related imageநாட்டின் தற்போதைய அரசியல் சூழலில் பொதுத் தேர்தல் நடத்துவதே பொருத்தமானது என முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
மீயுயர் நீதிமன்றுக்கு இன்று (16) வருகை தந்திருந்தபோது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டுக்காகப் போரிடுவதே தமது கட்சியின் வழக்கமாக இருப்பதாகவும் தொடர்ந்து போரிடத் தயார் என்றும் கூறிய அவர், இந்தச் சூழலில் பொதுத் தேர்தலை நடத்துவதே நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக, நாட்டின் நலனை முன்னிட்டு, எதிர்த் தரப்பில் அமர்ந்து அரசுக்கு ஆதரவளிக்கப் போவதாக மஹிந்த ராஜபக்ச கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Unknown