த்ரிஷாவுடன் மோதலா: கீர்த்தி சுரேஷ் விளக்கம் - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

த்ரிஷாவுடன் மோதலா: கீர்த்தி சுரேஷ் விளக்கம்

Related imageஹரி இயக்கும் சாமி 2 படத்தில் விக்ரமுடன் நடிக்க த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமானார்கள்.
படப்பிடிப்பு ஆரம்பமான நிலையில், திடீரென படத்திலிருந்து த்ரிஷா விலகினார்.
இதனால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் த்ரிஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் படத்தின் தயாரிப்பாளர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறைப்பாடு செய்தார்.
இதற்கிடையே படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு முக்கியத்துவம் இருப்பதாலேயே த்ரிஷா விலகிவிட்டதாகப் பேசப்பட்டது.
இந்நிலையில், த்ரிஷாவை விட தனக்கு காட்சிகள் அதிகம் வேண்டும் என கீர்த்தி சுரேஷ் கேட்டதாகவும் அதன்படி கதையில் மாற்றம் செய்ததாலேயே த்ரிஷா விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் காரணத்தால் த்ரிஷா – கீர்த்தி இடையே மோதல் உருவாகி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
எவ்வாறாயினும், இது பொய்யான தகவல் எனவும் படத்தில் த்ரிஷாவின் கதாப்பாத்திரம் பற்றி தனக்கு எதுவுமே தெரியாது எனவும் கீர்த்தி தெரிவித்துள்ளார்.
த்ரிஷாவுடன் தனக்கு எவ்விதப் பிரச்சினையும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

About Unknown