நடிகை ஸ்ரேயாவின் காதல் கதை விரைவில் திருமணம்..... - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

நடிகை ஸ்ரேயாவின் காதல் கதை விரைவில் திருமணம்.....

Related imageதமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களை நடித்த நடிகை ஸ்ரேயா, 2001-ம் ஆண்டு இஷ்டம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் இரண்டாம் கதாநாயகியாக அறிமுகமானார். மழை என்ற படம் மூலம் நல்ல வரவேற்பை பெற்று பல முன்னணி நடிகர்களோடு நடித்து முன்னணி கதாநாயகியாக வளம் வந்தார் ஸ்ரேயா.
பிறகு கதாநாயகியில் இருந்து, குணசித்ர நடிகையாக மாறி, தற்போது அந்த வாய்ப்பும் இல்லாமல் தெலுங்கு படங்களுக்கு முக்கியத்தும் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். மஞ்சு விஷ்ணு நடித்துள்ள காயத்திரி என்ற படத்தில் ஸ்ரேயாவும் முக்கிய கதாபாத்திரத்தலில் நடித்தார், அந்த படத்தை தயாரித்ததும் இவர் தான். இந்த நிலையில், நடிகை ஸ்ரேயாவின் திருமண செய்திகள் அவ்வப்போது வெளியாகி தான் வந்தது. அவர் ரஷ்யன் விளையாட்டு வீரர் ஆன்ட்ரி கோஸ்ச்சேவ் (Andrei Koscheev) என்பவரை மார்ச் மாதம் 17,18,19 ஆம் தேதிகளில் இந்து முறை படி திருமணம் செய்துகொள்ளப்போகிறார்
 இவர்களது திருமணம் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் நடிக்கப்போகிறது. மேலும், ஸ்ரேயா இவரை காதலித்து தான் திருமணம் செய்கிறார். இவர்களின் காதல் நட்பில் தான் ஆரம்பமாகியுள்ளது. மும்பையில் ஒரு பார்ட்டியில் சந்தித்துக் கொண்ட இருவரும் நண்பர்களாகி பின்னர் காதலர்களாகியிருக்கிறார்கள். சமீபத்தில் ரஷ்யா சென்று தன் வருங்காலக் கணவர் குடும்பத்தினரையும் ஸ்ரேயா சந்தித்துவிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் தான் மார்ச் 17ம் தேதி சங்கீத், மெஹந்தியும், 18ம் தேதி இந்து முறைப்படி கல்யாணமும், 19ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன என்று அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்கள்.

About Unknown