
கண் வீங்கிப்போய் இருந்தால், வெள்ளரியைத் துண்டுகளாக நறுக்கி, கண்களைச் சுற்றி 20 நிமிடங்கள் வைத்தால், அதில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் கண்ணின் வீக்கத்தைப் போக்கும். வெள்ளரியை முகத்தில் தடவினால், முகம்பொலிவு பெறும். வெள்ளரிச்சாற்றுடன், சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து, முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவினால், முகம் பொலிவு பெறும். கரும்புள்ளி போன்றவை நீங்கும்.
சூரியனில் இருந்து வரும் புறஊதாக்கதிர்வீச்சு, சருமத்தைப் பாதிக்கிறது. இதைத் தவிர்க்கும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. மேலும், சருமத்துக்குக் குளிர்ச்சியூட்டி, மென்மையாக்குவதுடன் புறஊதாக்கதிர்வீச்சால் ஏற்பட்ட பாதிப்பையும் போக்குகிறது. வெள்ளரியில் உள்ள சிலிகான் மற்றும் கந்தகம், முடி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன. வெள்ளரியைச் சாறு எடுத்து, தலையில் பூசி, 15-20 நிமிடங்கள் கழித்து, சீயக்காய் அல்லது ஷாம்பு போட்டுக் குளிக்க வேண்டும்.