இப்படி ஒரு கொடூரம் இலங்கையில்!! மகளின் கணவனை சொந்தமாக்க நினைத்த தாய் - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

இப்படி ஒரு கொடூரம் இலங்கையில்!! மகளின் கணவனை சொந்தமாக்க நினைத்த தாய்

தனது மகளின் கணவனுடன் (மருமகன்) கள்ளத்தொடர்பை பேணி வந்த பெண்ணொருவரை எச்சரித்துள்ளதாக எம்மாத்தகம காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணின் கணவர், சில ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரின கணவர் இறந்த பின்னர், தனிமையில் வசித்த வந்த குறித்த பெண், வேறு கிராமமொன்றில் வசித்து வந்த அவரின் மகளையும் மருமகனையும் அவருடன் வந்து தங்குமாறு அழைத்துள்ளார்.
இவரின் மகளுக்கு நான்கு குழந்தைகள் உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்நிலையில், குறித்த பெண்ணுக்கும் அவரின் மருமகனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
ஒருநாள் குடிபோதையில் வீடு வந்த கணவர், தனது தாயுடன் வீட்டின் மறைவான பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்ததை கண்ட மகள், இது தொடர்பில் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பின்னர் மகள், தாய் மற்றும் மருமகன் ஆகியோரை காவல்நிலையத்துக்க அழைத்த எம்மாத்தகம காவல்நிலைய பொறுப்பதிகாரி, குறித்த பெண்ணுக்கு அறிவுரை கூறி எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

About UK TAMIL NEWS