யாழ்ப்பாண வீதியில் நடந்த விபரீதம் - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

யாழ்ப்பாண வீதியில் நடந்த விபரீதம்

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி சென்றுகொண்டிருந்த கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்சாரக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று (02) நீர்வேலி அத்தியார் இந்து கல்லூரிக்கு அண்மையில் 2.45 மணியளவில் இடம்பெற்றது.
எனினும் காரில் பயணித்தவர்களுக்கு தெய்வாதீனமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
குறித்த கார், வீதியோரத்தில் வேகக்கட்டுப்பாடு எச்சரிக்கை சமிக்ஞை பதாகைக்கு அருகிலேயே வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About UK TAMIL NEWS