காதலித்தவளின் நிர்வாண போட்டோவை பாலியல் இணையத்தில் பரப்ப முற்பட்ட யாழ்ப்பாண காவாலி - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

காதலித்தவளின் நிர்வாண போட்டோவை பாலியல் இணையத்தில் பரப்ப முற்பட்ட யாழ்ப்பாண காவாலி

இளம் பெண்ணை மிரட்டி இரண்டு இலட்சம் ரூபாய் கப்பமாக பெற்ற இளைஞரை கைது செய்யுமாறு, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீ நிதி நற்தசேகரன் இன்று (20) உத்தரவிட்டார்.

காதலித்த போது பெற்றுக்கொண்ட புகைப்படங்களை உருமாற்றி ஆபாசப் படங்களாக இணையதளத்தில் வெளியிடப் போவதாகக் கூறி, தன்னிடம் 2 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை பெற்றுக்கொண்டதாக, பெண்ணொருவர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.
குறித்த முறைப்பாடு, இன்று (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் குறித்த இளைஞரை கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.

About UK TAMIL NEWS