காதலனின் பிரிவை தாங்கமுடியாமல் யுவதி தற்கொலை - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

காதலனின் பிரிவை தாங்கமுடியாமல் யுவதி தற்கொலை

வாகன விபத்தில் தனது காதலன் உயிரிழந்தமை காரணமாக ஏற்பட்ட சோகத்தில் யுவதியொருவர் தற்கொலை செய்துள்ளார்.
அநுராதபுரம் பரசன்கஸ்வெவ பிரதேசத்தில், நேற்று இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
18 வயதுடைய என்.கேஷானி எரங்கி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரத்திலுள்ள தனியார் விற்பனை நிலையத்தில் பணி புரிந்த யுவதி, தனது காதலனின் 7ஆம் நாள் கிரியைகள் நிறைவடைந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தனது அறைக்குள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட யுவதி, தனது காதலனின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் உயிரிழந்துள்ளதாக சந்தேகிப்பதாக, காவற்றுறையினரிடம் யுவதியின் தாய் கூறியுள்ளார்.

About UK TAMIL NEWS