சினிமாவில் ரீமேக் படங்கள் இப்போது நிறைய வருகின்றன. அந்த வகையில் இளையதளபதி விஜய் நிறைய ரீமேக் படத்தில் நடித்து இருக்கிறார், இவருடைய படங்களும் வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் பாலிவுட்டில் அக்ஷய் குமார் நடிப்பில் பிரபு தேவா ரவுடி ரத்தோர் என்ற பெயரில் விக்ரமார்குடு என்ற தெலுங்கு படத்தை ரீமேக் செய்திருந்தார்.
இந்த படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் விஜய் நடனமாடியிருந்தார். படப்பிடிப்பின் போது விஜய்யை முதன்முதலாக நேரில் சந்தித்த அக்ஷய் குமார், பிரபுதேவாவிடம் அவருக்கு வயது 17 தானே என்று கேட்டாராம்.
இதனை பிரபுதேவாவே பல பேட்டிகளில் கூறியுள்ளார்.