நடிகை அம்பிகாவின் மகன் சினிமாவில் நடிக்கிறார் - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

நடிகை அம்பிகாவின் மகன் சினிமாவில் நடிக்கிறார்

1980-களில் தென்னிந்திய சினிமாக்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை அம்பிகா. குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமாகி 1978-ம் ஆண்டு ‘சமயமாயில்லா போலும்’ என்ற படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்று முன்னணி கதாநாயகியாக தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட படங்களில் கொடி கட்டிப் பறந்தார். 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
1990 வரை நம்பர் ஒன் இடத்தில் இருந்த நடிகை அம்பிகா அதன்பிறகு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடு பட்டார். தற்போது 54 வயதாகும் அம்பிகா தனது மகன் ராம்கேசவை சினிமாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார்.
இதுபற்றி அம்பிகா கூறுகையில், “எனது மகன் கேசவ் சினிமாவில் நடிக்க தயாராகி விட்டான். தமிழ்- மலையாளத்தில் அறிமுகமாக இருக்கிறான். இந்த தகவலை முன்கூட்டியே வெளிப்படுத்தி இருக்கிறேன். சிறப்பான முறையில் அவனை நடிகனாக அறிமுகப்படுத்த இருக்கிறேன்” என்றார்.

About UK TAMIL NEWS