கத்தாரை தனிமைப்படுத்தியது ’மனிதாபிமானமற்ற செயல்’ : துருக்கி குற்றச்சாட்டு - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

கத்தாரை தனிமைப்படுத்தியது ’மனிதாபிமானமற்ற செயல்’ : துருக்கி குற்றச்சாட்டு

ஜ.எஸ்.தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி செய்வதாக குற்றம்சாட்டி கத்தாருடன் ஆன தூதரக உறவை சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, ஏமன், அமீரகம், லிபியா அரபு நாடுகள் துண்டித்தன.
இதனால் மேற்கண்ட நாடுகளுக்கிடையே விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தூதர்கள் திரும்ப பெறப்பட்டனர். மேலும் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் நிலவுகிறது. கத்தார் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், கத்தார் நாட்டுடனான தூதரக உறவை சவுதி அரேபியா, பக்ரைன் உள்ளிட்ட நாடுகள் துண்டித்து அந்நாட்டை தனிமைப்படுத்தியது மனிதாபிமானமற்ற செயல் என்று துருக்கி குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக தொலைக்காட்சியில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகன், ”கத்தார் தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடு அல்ல. துருக்கியுடன் இணைந்து ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது” என்றார்

About UK TAMIL NEWS