இலங்கை செல்லும் அமெரிக்க பெண்களுக்கு எச்சரிக்கை - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

இலங்கை செல்லும் அமெரிக்க பெண்களுக்கு எச்சரிக்கை

இலங்கைக்கு சுற்றூலா மேற்கொள்ளும் அமெரிக்க பெண்கள் கொழும்பு நகரில் முச்சக்கரவண்டியில் பயணிக்கவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கையினை அமெரிக்க தூதரகம் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முச்சக்கரவண்டி சாரதிகள் அந்நாட்டு பெண் பயணிகளிடம் தகாதவாறு நடந்து கொள்ள முயற்சித்தமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்க பெற்றதன் பின்னே குறித்த எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்,தனிமையில் பயணிப்பவர்களுக்கு பாதுகாப்பிற்காக நிறுவனங்களின் மூலம் இயங்கும் முச்சக்கரவண்டிகளை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது

About UK TAMIL NEWS