வெள்ளங்குளத்தில் நீரில் மூழ்கி ஏழு வயது சிறுவன் மரணம்! - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

வெள்ளங்குளத்தில் நீரில் மூழ்கி ஏழு வயது சிறுவன் மரணம்!

நேற்றயதினம் பத்து மணியளவில் தேவன்பிட்டி வெள்ளங்குளம் பகுதியில் சக நண்பர்களுடன் ஆறு ஒன்றைக் கடக்க முற்ப்பட்ட சிறுவன் ஒருவர் ஆற்றில் வீழ்ந்துள்ளார் ஊர்மக்களால் மீட்க்கப் பட்டு முழங்காவில் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு நோயாளர் காவுவண்டியில் கிளிநொச்சி வைத்திய சாலைக்கு கொண்டு வந்த போதும் இறந்த நிலையிலையே கிளிநொச்சி வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்
சம்பவத்தில் இறந்த சிறுவன் தேவன்பிட்டி வெள்ளங்குளத்தை சேர்ந்த ஏழு வயதான அருள்ஞானம் அருள்விஜிந்தன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்
சிறுவனது சடலம் மரண விசாரணை அதிகாரின் பரிசோதனையின் பின்னர் மன்னர் பொலிசாரின் விசாரணைகளுடன் இன்று கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் இருந்து உறவினர்களிடம் வழங்கப்பட்டுள்ளது l

About UK TAMIL NEWS