கேப்பாபிலவு காணி விரைவில் விடுவிப்பு! ஜனாதிபதி இணக்கம்!! - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

கேப்பாபிலவு காணி விரைவில் விடுவிப்பு! ஜனாதிபதி இணக்கம்!!

கேப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் வெகுவிரைவில் விடுவிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எனினும், காணிகளை விடுவிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளபோதிலும், அதனை விடுவிப்பதற்கான காலத்தை உறுதியாக கூற முடியாதுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒட்டுசுட்டானில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் ” சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் நேற்றுமுன்தினம் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.
இதன்போது, கேப்பாப்புலவு காணி விடுவிப்பு தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக சுமந்திரன் கூறியுள்ளார்.
அத்துடன், குறித்த காணிகளை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளதாக” எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

About UK TAMIL NEWS