பிரபாகரனைப் போன்று சவால் விட யாருமே இல்லை! சுமனரத்ன தேரர் கவலை - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

பிரபாகரனைப் போன்று சவால் விட யாருமே இல்லை! சுமனரத்ன தேரர் கவலை

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் போல சவால் விடும் தமிழ்த் தலைமைகள் யாரும் இல்லை என மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதை தெரிவித்துள்ளார். தொடர்ந்து குறித்த அறிக்கையில்,
பிரபாகரனைப் போல அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் தமிழ் தலைமைகள் யாரும் தற்போது இல்லை.
தமிழ் மக்களுக்கு நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்க பிரபாகரனைப் போன்று தமிழ் தலைமைகள் முன்வருவதில்லை.
சில சக்திகள் கிழக்கு மாகாணத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தமிழ் மக்களை அடக்க திரைமறைவில் முயல்வதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் காலம் தற்போது ஏற்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் தமது வாக்குகளை தமிழினத்திற்கு வாக்களித்து கிழக்கு மாகாணத்தை காப்பாற்ற வேண்டும், யுத்த காலத்தை விட யுத்தம் முடிந்த பின்னரே தமிழ் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

About UK TAMIL NEWS