அமெரிக்க சமூக வலைதளங்களில் பிரியங்கா சோப்ராவுக்கு முதல் இடம் - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

அமெரிக்க சமூக வலைதளங்களில் பிரியங்கா சோப்ராவுக்கு முதல் இடம்

இந்தி பட உலகில் இருந்து ஹாலிவுட் சென்று பிரபலமாகி இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் நடித்த ‘பேவாச்’ ஆங்கில படத்தை தொடர்ந்து, மற்றொரு ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சமூக வலைதளங்களில் திரை உலகை சேர்ந்த யார் யார் பிரபலமாக இருக்கிறார்கள் என்பது பற்றி கருத்துக்கணிப்பு நடந்தது. இதை அனாலைட்டிக்ஸ் நிறுவனமான எம்விபி இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் பிரியங்கா சோப்ரா முதல் இடத்தில் இருக்கிறார்.
ஹாலிவுட் நடிகர் ராக் (டிவைன் ஜான்சன்) 2-வது இடத்தில் உள்ளார். ஹாலிவுட் பிரபலங்கள் ஹெலின் ஹார்ட் கேடாக், கேரா டெலபிஞ்ச், வின்டீசல், ஜெனிபர் லோபஸ், ஆஷ்லிபென்சன், ஜாக் எப்ரான், ஷேபிட்சல் ஆகியோர் முதல் 10 இடங்களில் இருக்கிறார்கள்.

About UK TAMIL NEWS