கொழும்பில் நடந்த சோகம்!! பரிதபமாக உயிர் இழந்த 25 வயது பெண்!! - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

கொழும்பில் நடந்த சோகம்!! பரிதபமாக உயிர் இழந்த 25 வயது பெண்!!

டெங்கு நோயினால் பலியான இளம் யுவதி ஒருவரின் மரணம் தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த ரொமாலி டி சில்வா என்ற 25 வயது பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
கொழும்பின் பிரபல தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த பெண் திடீர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காய்ச்சலில் பாதிக்கப்பட்ட ரொமாலியை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்களின் சரியான கவனிப்பு இல்லாத காரணத்தால் அந்த பெண் உயிர் இறந்ததாக கூறப்படுகிறது
ஆபத்தான நிலையில் இருந்த அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க ஒருவர் கூட முன்வரவில்லை என்று கூறுகிறார்கள் அந்த பகுதி மக்கள் ,.உயிரிழப்பதற்கு முதல் நாள் இரவு அவர் கடுமையான வயிற்று வலியில் இருந்தார் என மருத்துவரிடம் குறிப்பிட்டு உள்ளார்
அதனை தொடர்ந்து கடுமையான கை வலியும் ஒன்று ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அது திடீர் மாரடைப்பிற்கான அறிகுறிகளாகும்.
அதுவெறும் தசை வலி என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அப்போது மருத்துவர்கள் தோள்பட்டையை மசாஜ் செய்துள்ளனர். எனினும் அவர் அதற்கு அடுத்த நாள் உயிரிழந்துள்ளார்.
எப்படி இருந்தாலும் அந்த மருத்துவமனை அதிகாரிகள் ரொமாலி பெற்றோரிடம் ரூ .7,80000 மருத்துவம் பார்த்த உரியகட்டணம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்கள் .
இந்த சம்பவத்தினால் இன்னமும் அதிர்ச்சியிலுள்ள பெற்றோர் இது தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

About UK TAMIL NEWS