பாதிக்கப்பட்டோருக்கான வீடுகளை விரைவில் நிர்மாணிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

பாதிக்கப்பட்டோருக்கான வீடுகளை விரைவில் நிர்மாணிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

சீரற்ற காலநிலை தொடர்பில் களுத்துறை மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தார்.
இந்த கலந்துரையாடலில் அமைச்சர்கள், இடர் முகாமைத்துவ அதிகாரிகள், முப்படை அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான நட்ட ஈடு வழங்கும் நடவடிக்கை தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
வீடமைப்பு அதிகாரசபை, முப்படையினர், அரச நிறுவனங்களைப் பயன்படுத்தி விரைவில் வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும், இந்தியாவிலிருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட நிவாரணப் பொருட்களை நாளைய தினம் (28) பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

About UK TAMIL