ஹரக் கட்டா விவகாரம் - Global Tamil Voice உலக தமிழ் குரல்

ஹரக் கட்டா விவகாரம்



 

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் 'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்னவின் மனைவியிடமிருந்து இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், மூன்று சந்தேகநபர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்யுமாறு கோரி சீராய்வு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரகித ராஜபக்ஷ, சரித் அபேசிங்க உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் முன்னர் தீர்மானித்திருந்தது.

இந்நிலையில், குறித்த நீதிமன்றத் தீர்மானத்தை வலுவற்றதாக்கி, பிணை உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC), கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

குறித்த மனு இன்று (30) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த விசாரணையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்மானம் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


About Lanka Theepam