தெமட்டகொட பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் சோதனை! 19 வயது இளைஞர் கைது... - Global Tamil Voice உலக தமிழ் குரல்

தெமட்டகொட பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் சோதனை! 19 வயது இளைஞர் கைது...

 



தெமட்டகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாலிபுல்ல தோட்டம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 100 கிராம் ‘ஐஸ்’ எனப்படும் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருளுடன் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (06) இரவு இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


About Lanka Theepam