109 பேர் விடுதலை - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

109 பேர் விடுதலை

நாட்டின் கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்த குற்றத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 136 பேரில் 109 பேரை அரசு விடுவித்துள்ளது. விடுவிக்கப்பட்ட மீனவர்கள் எதிர்வரும் ஓரிரு நாட்களில் தமது நாடு போய்ச் சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த மீனவர்கள் கடந்த மாத மத்தியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபின் இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் ஒருவரது மகன் நோய் காரணமாக மரணித்ததையடுத்து, நல்லெண்ண அடிப்படையில் அவரும் அவருடன் மேலும் மூன்று மீனவர்களும் கடந்த 9ஆம் திகதி விடுவிக்கப்பட்டிருந்தனர்.
மேற்படி 109 மீனவர்களில் 30 பேர் பருத்தித்துறை நீதிமன்றத்தாலும் 79 பேர் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தாலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் 27 பேர் யாழ். மற்றும் மன்னார் சிறைகளில் மறித்து வைக்கப்பட்டுள்ளனர்.
கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா எதிர்வரும் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், தமிழக மீனவர்களின் விடுதலையானது மிகுந்த சந்தோஷத்தையும் பரஸ்பர நல்லெண்ணத்தை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது என தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

About Unknown