வித்தியா கொலை சந்தேகநபர்களை பொது மக்கள் அடித்தே கொன்றிருப்பார்கள்! - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

வித்தியா கொலை சந்தேகநபர்களை பொது மக்கள் அடித்தே கொன்றிருப்பார்கள்!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை பொது மக்கள் அடித்தே கொலை செய்திருப்பார்கள் என பொலிஸார் “ட்ரயல் அட்பார்” தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளனர்.
எனினும், தமது உயிரை பணயம் வைத்து அவர்களை காப்பாற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் போது தீர்ப்பாயத்தில் பொலிஸார் தெரிவிக்கையில், “சந்தேகநபர்களைப் பொது மக்கள் அடித்துச் சாகடிக்கும் நோக்கில் இருந்தனர். பொலிஸார் தமது உயிரைப் பணயம் வைத்து சந்தேகநபர்களின் உயிரைக் காப்பாற்றினார்கள்.
புங்குடுதீவில் வீதித் தடை ஏற்படுத்தி காரைநகர் கடற்படை முகாமில் வைத்து சந்தேகநபர்கள் பாதுகாக்கப்பட்டனர்.
ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்துக்கு சந்தேகநபர்களைக் கொண்டு செல்ல முயன்ற போது புங்குடுதீவில் இருந்து பல பஸ்களில் மக்கள் வர முற்பட்டதால் அங்கும் சந்தேகநபர்களுக்கு பாதுகாப்பிருக்கவில்லை.
அதனால் சந்தேகநபர்களை காரைநகர் கடற்படை முகாமில் வைத்து பாதுகாத்தோம் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதேவேளை, கொலை வழக்கின் 4 முதல் 8 வரையான சந்தேகநபர்கள் சித்திரவதைக்கு உட்டுத்தப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டையும் பொலிஸார் மறுத்துள்ளனர்.

About UK TAMIL NEWS